Saturday 18th of May 2024 11:14:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவஸ்திரேலிய அணிக்கு 301 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி!

அவஸ்திரேலிய அணிக்கு 301 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி!


இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவஸ்திரேலியா அணிக்கு 301 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட குசல் மெந்திஸ் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தனுஸ்க குணதிலக 55 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக களமிறங்கிய வனிந்து ஹசரங்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 37 ஓட்டங்களை குவித்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE